இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா நீங்க ஜீரோ.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுப்பாரா விக்னேஷ் சிவன்?

  • IndiaGlitz, [Wednesday,January 18 2023]

அஜித்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அதற்கு கமெண்ட் அளித்த ரசிகர் ஒருவர் இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா நீங்க ஜீரோ’ என சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் பிப்ரவரி முதல் இந்த படம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் அஜித் ஒரு தொட்டியில் கை கழுவும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் பலர் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு நெட்டிசன் ஒருவர் ஓபன் சேலஞ்சு விட்டு இருக்கிறார். நீங்கள் எடுக்கிற அஜித் படம் மங்காத்தாவை விட மாஸ் ஆ இருக்குமா? என்று பார்க்கலாம். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் அனிருத் மற்றும் நயன்தாரா இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியாது. இவர்கள் இருவரும் இல்லை என்றால் நீங்கள் ஜீரோ, இவர்கள் இருவரும் தான் உங்களுடைய விசிட்டிங் கார்டு, உங்கள் படங்கள் அனைத்தையும் அனிருத் தான் காப்பாற்றி உள்ளார்’ என்று சவால் விட்டுள்ளார்.

இந்த நெட்டிசனின் சவாலை ஏற்று விக்னேஷ் சிவன் ’ஏகே 62’ படத்தை மங்காத்தா படத்தை விட ’ஏகே 62’ படத்தை சூப்பர் ஹிட் மாஸ் படமாக கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.