போட்டிக்கு நடுவே தடுக்கி விழுந்தும், தங்கம் வென்ற தங்கமங்கை… குவியும் வாழ்த்து!
- IndiaGlitz, [Wednesday,August 04 2021] Sports News
2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கு நடுவே சில சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஷிபான் ஹாசன் எனும் தடகள வீராங்கனை ஒருவர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார்.
போட்டியின் முதற்கட்டத்தில் நான்காவதாக ஓடிவந்த ஷிபான் தனக்கு முன்னாள் சென்ற வீராங்கனை ஒருவர்மீது மோதி தடுமாறிக் கீழே விழுந்தார். இதனால் ஷிபான் ஒரே செகண்டில் 13 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால் வெறும் 20 வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அவர் மீண்டும் வெறிப்பிடித்த மாதிரி ஓடி அடுத்த 35 வினாடிகளில் 6 ஆவது போட்டியாளராகக் களத்தில் முன்னேறினார்.
பின்னர் 6 ஆவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வந்த ஷிபான் 1,500 மீ ஓட்டப்பந்தயத்தில் தனக்கு முன்னாள் சென்ற 12 வீராங்கனைகளையும் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால் ஷிபான் ஹாசனின் மனம்தளராத முயற்சிக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இவர் 1,500 மீ ஓட்டப்பந்தயத்தைத் தவிர 5,000 மற்றும் 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார். ஆனால் முதல் போட்டியிலேயே தனது முழு எனர்ஜியையும் செலவழித்துவிட்ட இவரைப் பார்த்து பல மூத்த வீரர்களும் பயந்துபோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.