நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதா நெட்பிளிக்ஸ்?
- IndiaGlitz, [Wednesday,July 20 2022]
நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்கான வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திருமணத்திற்கான ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு இடையே ஆன ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்த சில புகைப் படங்களை வெளியிட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அதில் திருமணத்திற்கான செலவு தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.