நயன்தாராவின் திருமண வீடியோ: நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடந்த இந்த திருமணம் பிரமாண்டமாக நடந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு உரிமை பெற்று உள்ளதாகவும் விரைவில் இந்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளி வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சற்று முன் இந்த திருமண வீடியோ குறித்த ட்ரெய்லர் வீடியோவை நெட்பிளிக்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஒருவரை பற்றி இன்னொருவர் கூறிய கருத்துக்கள் அதில் உள்ளன. இதனை அடுத்து விரைவில் நயன்தாராவின் வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Cue the malems cos we're ready to dance in excitement??
— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com