நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ: நெட்பிளிக்ஸ் சூப்பர் அப்டேட்!
- IndiaGlitz, [Saturday,September 24 2022]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நயன்தாரா மீது தான் காதலில் விழுந்தது மற்றும் தங்களுடைய காதல் அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் விளக்கி உள்ளார். அதேபோல் நயன்தாராவும் தனது காதல் அனுபவத்தை விளக்கியுள்ளார்.
மேலும் நயன்தாராவின் ஆவணப்படமாக Nayanthara Beyond The Fairytale என்ற டைட்டிலில் இந்த வீடியோ விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த வீடியோவுக்காக நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.