ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் கட்டுக்கதை: நெட்பிளிக்ஸில் வருகிறது விக்கி-நயன் திருமண வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் இந்த திருமணம் குறித்த வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இயக்குனர் கௌதம் மேனன் இந்த வீடியோவை இயக்கியதாகவும் இந்த வீடியோ விரைவில் எடிட் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்ததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும், அது மட்டுமின்றி விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோவை ஒளிபரப்ப இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் அனுபவங்கள் டாக்குமெண்ட்ரி படமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் இந்த வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நயன் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
These images of Nayanthara and Vignesh have us seeing stars ??✨
— Netflix India (@NetflixIndia) July 21, 2022
BRB, we're doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix????it’s beyond a fairy tale!! pic.twitter.com/14poQwNAZv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments