'ஏகே 62', 'சந்திரமுகி 2' மட்டுமல்ல, மேலும் 6 படங்களை தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ் : என்னென்ன படங்கள்?

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் ’சந்திரமுகி 2’ ஆகிய இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 'ஏகே 62’ ’சந்திரமுகி 2’ மட்டுமின்றி மேலும் சில படங்களை படங்களின் டிஜிட்டல் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது, தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்க ரிலீசுக்கு பின்னர் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜிகர்தண்டா 2’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் கார்த்தி நடிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவான ’ஜப்பான்’ திரைப்படம், விக்ரம் பிரபு நடித்த ’இருகப்பற்று’ என்ற திரைப்படம், ஜெயம் ரவி நடித்த ’இறைவன்’ என்ற திரைப்படம் ஆகியவற்றையும் நெட்பிளிக்ஸ் நிருவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் விஷ்ணு விஷால் நடித்த ’ஆர்யன்’ என்ற திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி வருவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.