அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: நேர் கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

தல அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.
 

More News

கிளாப் அடித்து 'கிளாப்' படத்தை தொடங்கி வைத்த இளையராஜா!

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே 'தளபதி 63', 'கென்னடி கிளப்' உள்பட ஒருசில ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் இன்று மேலும் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது

முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி

சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அமிதாப், அபிஷேக் சுமந்து சென்ற உடல் யாருடையது தெரியுமா?

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக்பச்சனும் மரணம் அடைந்த ஒருவரின் உடலை இடுகாடு வரை சுமந்து சென்று இறுதிச்சடங்கை  நடத்தியுள்ளனர்.

இயக்குனர்தான் கப்பலின் கேப்டன்: வடிவேலுக்கு பிரபல இயக்குனர் பதிலடி

இயக்குனர் சிம்புதேவனையும் ஷங்கரையும் நடிகர் வடிவேலு சர்ச்சைக்குரிய வகையிலும் ஒருமையிலும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒட்டுமொத்த இயக்குனர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படும்: நடிகர் ராதாரவி பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.