'நேர் கொண்ட பார்வை' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போனிகபூர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 8 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற இரண்டு முன்னணி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது 'நேர் கொண்ட பார்வை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனங்கள் குறித்த அறிவிப்பை போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் மற்றும், கந்தசாமி ஆர்ட் செண்டர் நிறுவனத்தின் ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் இணைந்து வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
Happy to announce that our prestigious project with Ajith, Nerkonda Paarvai,will be released in TN by Mr. G. Srinivasan of M/s. S. Picture, Mr. K.Rajamannar of M/s. Kanthaswamy Arts Centre & Mr. Raahul
— Boney Kapoor (@BoneyKapoor) August 1, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com