'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,March 25 2019]
தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத், சுதந்திரதினம் ஆகிய விடுமுறை தினங்களை கணக்கிட்டு இந்த படம் ரிலீஸ் ஆவதால் 'விஸ்வாசம்' படத்தை அடுத்து இந்த படமும் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.