சென்னை திரும்பிய 'நேர்கொண்ட பார்வை' டீம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

  • IndiaGlitz, [Tuesday,April 02 2019]

கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராம் பிலிம் சிட்டியில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முதலில் தாடி மீசையுடன் கூடிய அஜித்தின் வழக்கறிஞர் கெட்டப்புக்குரிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அதன்பின் தாடிமீசையை எடுத்துவிட்ட அஜித், வித்யாபாலனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மொத்த டீமும் நேற்று சென்னை வந்தடைந்தனர். இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. விரைவில் அஜித் இந்த படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

More News

ராஜு முருகனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் கதை வசனம் எழுதிய திரைப்படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.

முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது: கமல்ஹாசன்

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமான நிலையில் தமிழ் திரையுலகமே அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியது.

நீட் தேர்வு-விவசாய கடன் ரத்து, ரபேல் விசாரணை: அதிரடியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சற்றுமுன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சமந்தாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சப்பாத்திக்குள் ரூ.2000 நோட்டு: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு இரவுபகலாக வாகன சோதனை உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.