இந்தியாவின் முதல் லேசர் புரஜொக்டர் தியேட்டரில் 'நேர் கொண்ட பார்வை'
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டதால் மின்னல் வேகத்தில் முன்பதிவுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் முதல் ஆர்சிபி லேசர் வசதி கொண்ட புரஜொக்டரை 'நேர்கொண்ட பார்வை' படத்திற்காக நிறுவியுள்ளதாக சென்னையில் உள்ள ஜிகே சினிமா அதிபர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் இந்த புரொஜெக்டரில் துல்லியமான கலர் மற்றும் 3டி அனுபவங்கள் கிடைக்கும் என்றும், இந்த புரஜொக்டர் மூலம் படம் பார்ப்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் லேசர் வசதி கொண்ட புரஜொக்டர் கொண்ட திரையரங்கில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்க்க ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout