இந்தியாவின் முதல் லேசர் புரஜொக்டர் தியேட்டரில் 'நேர் கொண்ட பார்வை'

  • IndiaGlitz, [Saturday,August 03 2019]

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டதால் மின்னல் வேகத்தில் முன்பதிவுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் முதல் ஆர்சிபி லேசர் வசதி கொண்ட புரஜொக்டரை 'நேர்கொண்ட பார்வை' படத்திற்காக நிறுவியுள்ளதாக சென்னையில் உள்ள ஜிகே சினிமா அதிபர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் இந்த புரொஜெக்டரில் துல்லியமான கலர் மற்றும் 3டி அனுபவங்கள் கிடைக்கும் என்றும், இந்த புரஜொக்டர் மூலம் படம் பார்ப்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் லேசர் வசதி கொண்ட புரஜொக்டர் கொண்ட திரையரங்கில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்க்க ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக தெரிகிறது.

More News

தேசிய அளவில் புகழ் பெற காத்திருக்கும் 'தல' அஜித்!

கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் கலந்துகொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

சசிகுமாருக்கு உதவி செய்யும் சரத்குமாரின் குடும்பம்

பிரபல நடிகர், இயக்குனர் சசிகுமாரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சரத்குமார், ராதிகா சரத்குமார், மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூவரும் இணைந்து வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

நடிகர், இயக்குனர் சமுத்திரகனி தற்போது ஒரே நேரத்தில் சுமார் எட்டு படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

யோகிபாபுவின் 'ஜாம்பி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு, ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவர் முக்கிய வேடங்களில்

மனைவி, மருமகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவாரா? பிரபல நடிகருக்கு ஸ்வேதா ரெட்டி கேள்வி

பிக்பாஸ் தமிழ் போலவே பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியும் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.