'நேர் கொண்ட பார்வை'யின் புதிய அப்டேட்: போனிகபூரின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுக்களை போனிகபூரே தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் இந்த படம் குறித்து மேலும் ஒரு அப்டேட்டை அவர் அளித்துள்ளார்.
அதாவது நேர் கொண்ட பார்வை' குறித்த புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த அப்டேட்டில் 'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதியை அவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எந்த அப்டேட்டாக இருந்தாலும் ஆறு மணிக்கு மேல் அஜித் ரசிகர்கள் இந்த அப்டேட்டை டிரெண்டுக்கு கொண்டு வந்துவிடுவார்கள் என்பது உறுதி
அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.
#NerkondaPaarvai update today evening at 6 pm. #Ajithkumar#HVinoth
— Boney Kapoor (@BoneyKapoor) July 15, 2019
@ZeeStudiosInt #AjithKumar #HVinoth @BoneyKapoor #BayViewProjects @SureshChandraa @ShraddhaSrinath @thisisysr @nirav_dop @ProRekha @DoneChannel1 @zeemusicsouth @ZeeMusicCompany pic.twitter.com/1zhSvlYV3l
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com