நெப்போலியன் மகன் பிரமாண்டமான நிச்சயதார்த்தம்.. மருமகளின் வீடியோ வைரல்..!
- IndiaGlitz, [Thursday,July 25 2024]
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் என்பவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் மணப்பெண்ணும் காணப்படுகிறார்.
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் நெப்போலியன் என்பதும் இவர் அரசியல்வாதியாக இருந்து உள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது அவர் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார் என்பதும் அங்கு சில தொழில்கள் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் என்பவருக்கு அரிய வகை நோய் இருப்பதை அடுத்து அவருக்கு சிகிச்சை செய்வதற்காகவே அவர் அமெரிக்காவில் செட்டில் ஆனதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நெப்போலியன் நெல்லையை சேர்ந்த பெண் ஒருவரை பேசி முடித்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நெப்போலியன் மகன் நிச்சயதார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் மணப்பெண் இருக்கும் காட்சியும் உள்ளது. இந்த நிச்சயதார்த்தத்தில் நெப்போலியன் பேசியபோது ’கடல் கடந்து நாங்கள் வாழ்ந்தாலும் தமிழகத்தில் இருந்து தான் மருமகளை கொண்டு வர வேண்டும் என்ற முடிவு செய்து இந்த பெண்ணை தேர்வு செய்து உள்ளோம்’ என்று நெப்போலியன் பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.