ஒமிரானை தொடர்ந்து நியோகோவ்… அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்துமா?
- IndiaGlitz, [Saturday,January 29 2022]
கொரோனாவின் ஆல்பா, பீட்டா, காமா வரிசையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் நேற்றுமுன்தினம் நியோகோவ் எனும் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்களில் 35% பேர் உயிரிழக்கக்கூடும் எனத் தற்போது விஞ்ஞானிகள் கூறியிருக்கும் தகவல் புது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் நியோகோவ் என்பது கொரோனா வைரஸின் புதிய உருமாறிய வைரஸ் இல்லை என்றும் இந்த வைரஸ் ஏற்கனவே மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் சீனாவின் வுகான் மாகாண விஞ்ஞானிகள் புது ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதாவது தற்போது மனிதர்களை தாக்கிவரும் SARS-Covid-2 வைரஸ் என்பது கொரோனா எனும் ஒரு பெரிய குடும்ப(கூட்டம்) வைரஸ் வகையைச் சேர்ந்தது. மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குடும்ப வைரஸை விங்ஞானிகள் “மெர்ஸ் கோவ்“ என அழைக்கின்றனர். இந்த மெர்ஸ்கோவின் மரபணுவை ஒத்திருப்பவைதான் கொரோனா, நியாகோவ் போன்றவை. மேலும் மெர்ஸ்கோவில் 7 வகை வைரஸ்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது கொரோனா கடந்த டிசம்பர் 2019இல் இருந்து மனிதர்களிடையே பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸின் மரபணுவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு ஆல்பா, பீட்டா, காமா வரிசையில் தற்போது ஒமிக்ரான் வரை பல உருமாறிய கொரோனா வைரஸ்கள் மனிதர்களை தாக்கி வருகின்றன.
இந்த வரிசையில் நியோகோவ் பரவிவருவதாக சிலர் பயந்த நிலையில் தற்போது வுகான் விங்ஞானிகள் ஆல்பா, பீட்டா வரிசையில் நியோகோவ் என்பது உருமாறிய வைரஸ் இல்லை என்றும் இது கொரோனா குடும்ப வைரஸ் வகையைச் சேர்ந்தது என்றும் தெளிவுப் படுத்தியுள்ளனர். மேலும் இது மெர்ஸ்கோவ் எனப்படும் அதன் மூல வைரஸோடு 85% விழுக்காடு நெருங்கிய தொடர்புடையது என்றும் கூறியுள்ளனர்.
கடந்த 2010 இல் இந்த நியாகோவ் வைரஸ், தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களிடையே பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அதில் 35% பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனாவை போலவே இந்த புதிய வைரஸும் மனிதர்களை அச்சுறுத்துமா? எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில் நியோகோவ் அவ்வளவு எளிதில் மனிதர்களிடம் பரவ வாய்ப்பு இல்லை என்றும் வுகான் மாகாண விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வவ்வால்களில் இருந்து ACE2 செல் மூலம் நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நியோகோவ் மனிதர்களுக்கு இருதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஆனால் இந்த வைரஸ் T510F எனும் உருமாற்றத்தை அடைந்த பின்னரே மனிதர்களிடம் நோய்த்தொற்றை ஏற்படுத்த முடியும். இதைத்தவிர மனிதர்களுக்கு நோய்த்தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கும் என்சைமன் ஒன்றும் இந்த நியோகோவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனால் நியோகோவ் என்பது குறைந்த அளவே பரவுவதற்கு சாத்தியம் இருக்கிறது எனவும் ஒமிக்ரானை போல நியோகோவ் என்பது உருமாறிய புது வைரஸ் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.