Nenjil Thunivirundhal Review
நெஞ்சில் துணிவிருந்தால் - சுசீந்திரனின் வழக்கமான படைப்பு
இயக்குனர் சுசீந்திரன் கமர்சியல் வட்டத்துக்குள் உணர்வு பூர்வமான எதார்த்த கதைகள் கொண்ட வெண்ணிலா கபடி குழு நான் மஹான் அல்ல அழகர்சாமியின் குதிரை ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்களை தந்து வெற்றி பெற்றவர். அவரின் நெஞ்சில் துணிவிருந்தால் அந்த வரிசையில் சேராமல் அவருடைய சமீபத்திய பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு வரிசையில் சேர்ந்திருப்பது சோகம்.
சந்தீப் கிஷன் எந்த வம்பு தும்புக்கும் போகாத ஒரு பக்கத்து வீடு பையன் அவர் தந்தையை ஒரு தப்பான அறுவை சிகிச்சையால் இழந்து விட கேட்டரிங் வேலை பார்த்து தன் தாயையும் டாக்டருக்கு படிக்கும் தங்கையையும் காப்பாற்றுகிறார். அவர் நண்பர் விக்ராந்த் அதிரடி ஆசாமி தன் நண்பனுக்கு ஒன்றென்றால் உடனே இறங்கி அடிப்பவர். சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தும் காதலிக்க அது தெரிந்தால் நட்பு கேட்டு விடும் என்று மறைத்து விடுகிறார்கள். ஹரிஷ் உத்தமன் துரைபாண்டி என்கிற கொடூர மனம் கொண்ட ஒரு கூலிப்படை தலைவன். பணத்தை வாங்கி கொண்டு பல சமயம் பணத்தை கொடுக்கிறவரையே போட்டு தள்ளிவிட்டு எதிராளியிடமும் பணம் வாங்கி ரெட்டை சம்பாத்தியம் பார்ப்பவர். ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமன் விக்ராந்துக்கு குறி வைப்பது போல தோன்ற ஆனால் அதை விட பெரிய ஆபத்து ஹீரோவின் குடும்பத்துக்கு இருக்கிறது என்கிற ட்விஸ்ட் எழ அதிலிருந்து எல்லோரும் மீண்டார்களா இல்லையா என்பதே மீதி கதை.
திறமையான இளம் நடிகர் சந்தீப் கிஷன் பக்கத்துக்கு வீட்டு பையன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் பிரச்னை கண்டால் அதை சுமூகமாக முடிக்கும் மனநிலை அதே சமயம் தேவை படும்போது அவருக்கென்று இருக்கும் ஒரு ஸ்பெஷல் உடும்பு பிடியை பயன்படுத்து வில்லன்களை நிலை குலைய செய்யவைக்கும் ஸ்டைல் என அசத்துகிறார். விக்ராந்துக்கு சமீப களங்களில் வந்த அதே நண்பன் கேரக்டர் என்றாலும் குறை சொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியாக செய்திருக்கிறார். சந்தீப்பின் ஜோடியாக திணிக்கப்பட்டிருக்கும் மெஹரீன் கதாபாத்திரம் எடுபடாமல் போகிறது. சந்தீப்பின் தங்கையாக விக்ராந்தின் ஜோடியாக வரும் ஸாதிகா நடிப்பு ஓகே. சூரியும் அப்புகுட்டியும் இருந்தும் துளி கூட காமடி இல்லை அந்த பார் காட்சியில் குடிமகன்கள் ஒத்துழைப்பை நாடி மனைவியிடம் போன் பேசுவது தவிர. கொடூர கூலிப்படை கொலையாளியாக வரும் ஹரிஷ் உத்தமன்த்தான் படத்தில் அதிகம் ஸ்கோர் செய்ய்பவர் undefined கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு காய்கள் நகர்த்தி பிளாக் மெயில் செய்து அவர் செய்யும் ஒவ்வொரு பலனும் அடி வயிற்றை கலக்கும் ரகம்.
சாதாரண மக்களை அவர்களுக்கு தெரியாமல் வில்லன் ஆட்கள் பல நாள் பின் தொடர்ந்து செல் போனில் அவர்கள் நடவடிக்கைகளை பதிவு செய்து கொலை செய்ய திட்டம் போடும் காட்சிகள் நிஜமாகவே பாத பதைக்க வைக்கின்றன. அன்பறிவின் ஆக்ஷன் காட்சி அமைப்புகள் அனைத்தும் விறு விருப்பு.
நெஞ்சில் துணிவிருந்தால் திரைக்கதையமைப்பு அரைத்த பழசான ஒன்றாக இருப்பதே பெரிய மைனஸ் அதே போல் கதாபாத்திர படைப்பிலும் அதிகம் மெனக்கெட்டது போல் தெரியவில்லை. கதை ஒரே இடத்தில சிக்கி கொண்டு நகர மாட்டேன் என்று அடம்பிடிக்க காரணம் கற்பனை பஞ்சமே. ஒரே ஒரு திருப்பத்தை நம்பி அதுவும் நம்பக்கூடியதாக இல்லாமல் இருப்பதால் பெரிய சோர்வு தான் ஏற்படுகிறது.
டி ஈமானின் வழக்கமான எங்கேயோ கேட்டமாதிரியே தெரியும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை பின்னணியில் ஒரே தீமை திரும்ப திரும்ப போட்டு அழுக்கை வைத்திருக்கிறார். கைதேர்ந்த எடிட்டர் மு காசிவிஸ்வநாதன் தான் இந்த படத்தில் வேலை செய்திருக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது பார்வையாளர்களுக்கு ஏற்கனவே தெரிந்த தகவலை திரும்ப திரும்ப காட்சியாக போட்டு காண்பித்து கடுப்பேத்துகிறார். கதை திரைக்கதை இயக்கம் ஆகிய பொறுப்புகள் ஏற்றிருக்கும் சுசீந்திரன் அவர் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
சுசீந்திரன் பாணி படங்களை ரசிப்பவர்கள்ளுக்கு பிடிக்கும்
- Read in English