நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் 2வது திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Thursday,November 16 2017]

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் ஊடகங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக முதல் பாதியில் இடம்பெற்ற ரொமான்ஸ் காட்சிகள் போரடிப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் படக்குழுவினர் அதிரடியாக முதல்பாதியின் 20 நிமிட ரொமான்ஸ் காட்சிகளை நீக்கி புத்துயிர் கொடுத்து மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.,

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட அதிரடி மாற்றமாக இந்த படம் இன்றுடன் திரையரங்குகளில் இருந்து தூக்கிவிட்டு, புத்தம் புதிய பொலிவுடன் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறியபோது, 'நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை உண்மையாக விமர்சனம் செய்தவர்களுக்கும், உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. எதிர்பாராத காரணத்தால் இந்த படம் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படாது. மீண்டும் இந்த படத்தை அடுத்த மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்று கூறினார்.