சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கிய கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. நாளை மறுநாள் அதாவது நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் குறித்த முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்
சந்திப்கிஷான், மெஹ்ரின், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அன்னை பிலிம் பேக்டரி மற்றும் வெண்ணிலா புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறியபோது, '''நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. என்னுடைய அனைத்துப் படங்களிலும் சமூக நீதி இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது. இந்தப் படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருவார்.
புதுமுகங்களைக் கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. என்னுடைய படங்களில் 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர் சாமியின் குதிரை' , 'ஜீவா' ,' மாவீரன் கிட்டு' போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்கள்தான் காலத்திற்கும் நிற்கும். மிகப் பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும்'' என்று இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.
இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் விக்ராந்த் இந்த படம் குறித்து கூறியபோது, ' ‘சினிமா வாழ்க்கையில் எனக்கு ‘பாண்டிய நாடு’ ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம். சுசீந்திரனை பொறுத்த வரை சொல்லவே வேண்டாம். அவர் என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைத்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவர் எனக்கு சகோதரர் மாதிரி. அவருக்கு நான் மிகமிக கடமைபட்டுள்ளேன். சொல்லப்போனால் அவர்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்க சொன்னாலும் நான் நடிக்க தயார்.”என்று கூறினார்
டி.இமானின் இசையில் ஏற்கனவே ஆறு பாடல்களும் ஹிட்டாகியிருந்தாலும் குறிப்பாக ஹரிஹரன் பாடிய 'அறம் செய்ய விரும்பு' என்ற மெலடி பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய ஸ்டார்களை நம்பாமல் திரைக்கதையில் நம்பிக்கை வைத்து மீண்டும் புதுமுகங்களுடன் களமிறங்கியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை நாளை மறுநாள் திரை விமர்சனத்தில் பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com