கவின் திருமணத்திற்கு வந்த திரையுலக பிரபலங்கள்..வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,August 21 2023]

நடிகர் கவின், மோனிகா என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் வைரலாகியது என்பதை பார்த்தோம். மேலும் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கவின் - மோனிகா தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கவின் - மோனிகா திருமணத்தில் கலந்து கொண்ட திரை உலக பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் கவின் - மோனிகா தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்த நிறுவனத்தில் நெல்சன் திலீப்குமார், அவரது மனைவி மோனிஷா, விக்னேஷ் சிவன், நடிகை பிரியங்கா மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கவின் - மோனிகா தம்பதியுடன் உணவு சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.