சிவகார்த்திகேயன், அனிருத்தை நம்பித்தான் இருக்கின்றேன்: நயன்தாரா பட இயக்குனர்

நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் வசூலிலும் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமீபத்தில் நாளிதழ் ஒன்று கொடுத்த விருதை சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் பெற்றுள்ளனர். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் நெல்சன், ”உங்க ரெண்டு பேரையும் நம்பி தான் என்னுடைய டாக்டர் படமே இருக்கிறது, பார்த்து செய்யுங்க” என்று கூறியிருக்கிறார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

More News

கொரோனா வைரஸால் தள்ளி போன பிரபல நடிகையின் திருமணம்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாள்களாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிரபல மலையாள நடிகை உத்தரா உன்னி என்பவரின் திருமணம் தள்ளிப் போயுள்ளது 

'விக்ரம் வேதா' இயக்குனர்களின் அடுத்த படத்தில் பார்த்திபன்

கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி  இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

கொரோனா எதிரொலி: சென்னையில் 500 கிலோ சிக்கன் பக்கோடா இலவசம்

சென்னை ஆலந்தூரில் இலவசமாக 500 கிலோ சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டன என்பதும் இதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2 விவிஐபிகளை தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல் 

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பொதுமக்களை மட்டுமின்றி அரசியல்வாதி மற்றும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

கொரோனா அச்சம்!!! கைகுலுக்கலைத் தவிர்த்த உலகப் பிரபலங்கள்; சுவாரசியமான தருணங்கள்!!!

ஒருவரின் கைகளை இன்னொருவர் இறுக்கமாகப் பிடித்து குலுக்கி தனது அன்பையும் வணக்கத்தையும் தெரிவிப்பது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படும் ஒரு வழக்கம்.