ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சனிடம் விசாரணை நடந்ததா? அவரே அளித்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் இயக்குனர் நெல்சன் இடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இந்த கொலை சம்பந்தமாக இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது.

இந்த கொலை வழக்கில் தேடப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து விசாரணை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மோனிஷாவை அடுத்து நெல்சன் இடமும் போலீசார் விசாரணை செய்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் எதுவும் வரவில்லை என்றும், காவல்துறையில் இருந்து என் வாழ்நாளில் எந்த ஒரு தொலைபேசியோ, நேரிலோ வருமாறு அழைப்பு விடுவதில்லை’ என்றும் தெரிவித்தார். மேலும் இது குறித்து எந்த அதிகாரியிடம் நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது’ என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் நெல்சனிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.