பீஸ்ட்' குழுவினர்களுக்கு விஜய் வைத்த பார்ட்டி: வைரல் புகைப்படம்

தளபதி விஜய் நடித்த பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும், இந்த படம் வசூல் அளவில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சன் டிவியில் விஜய் மற்றும் நெல்சன் உரையாடலில் பீஸ்ட்’ படக் குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து விஜய் விருந்து வைத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த புகைப்படத்தை நெல்சன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பீஸ்ட்’ படத்திற்கு வாய்ப்பும், ஒத்துழைப்பும் கொடுத்த விஜய் அவர்களுக்கு மிகவும் நன்றி என்றும் அவருடைய உண்மையான உழைப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது என்றும் கூறியுள்ளார் .

மேலும் எனக்கு இந்த அரிய வாய்ப்பை அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், கலாநிதி மாறன் மற்றும் காவியா மாறன் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த பதிவில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் தனது வீட்டில் விருந்து வைத்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.