'ஜெயிலர்' படத்தில் இணையும் நெல்சனின் ஆஸ்தான நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்’ திரைப்படத்தில் இயக்குனர் நெல்சனின் மூன்று படங்களிலும் நடித்த ஆஸ்தான நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் 'ஜெயிலர்’. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை படங்களை அடுத்து நெல்சன் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வில் உள்ள நிலையில் அவரது இயக்கத்தில் உருவான 3 படங்களில் நடித்த யோகி பாபு, 'ஜெயிலர்’ படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நெல்சனின் மூன்று படங்களிலும் யோகிபாபுவுக்கு செம கேரக்டராக இருந்த நிலையில் தற்போது 'ஜெயிலர்’ படத்திலும் நடிகர் யோகிபாபுவுக்கு ரஜினியுடன் டிராவல் செய்யும் முக்கிய கேரக்டர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.