திடீரென அஜித்தை சந்தித்த நெல்சன்.. டார்க் காமெடி படத்தில் தல?

  • IndiaGlitz, [Sunday,September 15 2024]

இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’ஜெயிலர் 2’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் திடீரென அவர் அஜித்தை சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெல்சன் இயக்கத்தில் அஜித் ஒரு டார்க் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

நடிகர் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படங்கள் இந்த ஆண்டு தீபாவளி மற்றும் அடுத்த ஆண்டு பொங்கல் என அடுத்தடுத்து வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சந்தித்துள்ளார். அவருடன் நடிகர் கவின் உடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ,நெல்சன், கவின் ஆகிய மூவரும் ஒரு டார்க் காமெடி படத்தில் இணைவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஒருவேளை இப்படி ஒரு படம் உருவானால் அது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News

'கூலி' படப்பிடிப்பில் ஓணம் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ஜாலியான வைரல் வீடியோ..!

இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தின் படப்பிடிப்பின்போது ஓணம் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்தியின் அடுத்த பட அறிவிப்பு.. இயக்குனர் இந்த பிரபல நடிகரா?

கார்த்தி நடித்துள்ள 'மெய்யழகன்' என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன்

அண்ணா பிறந்த நாளுக்கும் வாழ்த்து கூறிய தவெக தலைவர் விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காதலரை கைப்பிடித்த நடிகை மேகா ஆகாஷ்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

நடிகை மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்பட பலர் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த 3 பிரபலங்கள்: யார் யார்?

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள்