'பீஸ்ட்' படத்தின் அட்டகாசமான அப்டேட் தந்த நெல்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பதும் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அட்டகாசமான அப்டேட் ஒன்றை பதிவு செய்து அதில் ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய 100 நாட்கள் ஆகி விட்டது என்றும், இந்த 100 நாளும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தினங்களாகவும் அற்புதமான மனிதர்களுடன் பழகும் தினங்களாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும் அவர் பதிவு செய்த புகைப்படத்தில் அட்டகாசமான போஸில் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் உள்ளார்கள் என்பதும் இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
It’s “100th day of shooting”
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) November 28, 2021
100 days of fun with these amazing people #Beast ❤️ @actorvijay @hegdepooja @sunpictures pic.twitter.com/kgspauE8CL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com