வழக்கம் போல் ஒரு கலக்கல் புரமோ.. 4 நிமிட வீடியோவுடன் நெல்சன் - கவின் படத்தின் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,May 03 2024]

பொதுவாக நெல்சன் படம் என்றாலே புரமோ வீடியோ மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதும் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பது தெரிந்தது. குறிப்பாக ’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ பாடல் புரமோ இன்றும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது நெல்சன் தயாரிப்பாளராகி உள்ள நிலையில் அவரது முதல் படத்தில் கவின் நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்சன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தனது பாணியில் ஒரு வழக்கமான புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கவின், நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, மற்றும் இயக்குனர் சிவபாலன் ஆகியோர் உரையாடும் இந்த நான்கு நிமிட வீடியோவே கலக்கலாகவும் காமெடியாகவும் உள்ளது. இறுதியில் கவின் பிச்சைக்கார லுக்கில் இருக்கும் போஸ்டர் உடன் இந்த படத்தின் டைட்டில் ’பிளடி பெக்கர்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் இறுதியில் அந்த காஸ்ட்யூம் எல்லாம் பத்திரமா எடுத்து வையுங்கள் ஒருவேளை படம் முடிந்தவுடன் நெல்சனுக்கு தேவைப்படும் என்று ரெடின் கிங்ஸ்லி காமெடியுடன் சொன்னது போன்ற காட்சியுடன் வீடியோ முடிவுக்கு வருகிறது. பிச்சைக்காரன் லுக்கில் கவின் அசத்தலாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

More News

மொரிஷியஸ் நாட்டில் இளையராஜா குடும்பம்.. யுவனுக்கு சாப்பாடு ஊட்டும் இசைஞானி..!

இசைஞானி இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மொரிஷியஸ் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் புகைப்படம் வைரல்

பட்ஜெட்டை விட 10 மடங்கு வசூல் செய்த 'கில்லி'.. ரீரிலீஸில் இப்படி ஒரு சாதனையா?

கடந்த 2004 ஆம் ஆண்டு 'கில்லி' படம் எடுக்க செலவான பட்ஜெட்டில் இருந்து தற்போது அந்த படம் 10 மடங்கு வசூல் செய்ய உள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ரீல்ஸ் வீடியோ எடுக்க 17 டேக்.. 'சார்பாட்டா பரம்பரை' நடிகையுடன் இருப்பது அவரது காதலரா?

பா. ரஞ்சித் இயக்கத்தில்  உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற படத்தில் நடித்த நடிகை ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை 17 டேக்கிற்கு

சினிமாவில் நான் தோல்வி அடைந்தவன்.. ஆனால் என் மகனுக்கு வெற்றி: நடிகரின் நெகிழ்ச்சி பேச்சு..!

சினிமாவில் நான் ஒரு தோல்வி அடைந்த நடிகன் என்றும் ஆனால் எனது மகனுக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்து வருகிறது என்று நடிகர் ஒருவர் நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார்.

18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகர்.. 'கோட்' படத்தில் இன்னொரு வில்லன்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் ஏற்கனவே ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் ஒரு நடிகர் இணைய இருப்பதாக தகவல்