சர்கார் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு: 49P விதிப்படி வாக்களித்த வாக்காளர்:
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் 49P என்ற தேர்தல் விதிமுறை குறித்து விளக்கப்பட்டிருக்கும். அதுவரை இப்படி ஒரு விதி இருப்பது பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. அதாவது இந்த விதியின்படி நம்முடைய ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டு போட்டிருந்தாலும் தேர்தல் அதிகாரியின் அனுமதியை பெற்று நாம் ஓட்டு போடலாம் என்பதுதான் இந்த விதியின் ஸ்பெஷல்.
'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர் 49P விதி கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்துவிட்டது. தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையமும் இதுகுறித்து விளம்பரம் செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று தமிழத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுன்போது இந்த விதியை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்காளர் பயன்படுத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவரின் ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து , மணிகண்டனுக்கு 49 P தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments