சர்கார் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு: 49P விதிப்படி வாக்களித்த வாக்காளர்: 

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் 49P என்ற தேர்தல் விதிமுறை குறித்து விளக்கப்பட்டிருக்கும். அதுவரை இப்படி ஒரு விதி இருப்பது பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. அதாவது இந்த விதியின்படி நம்முடைய ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டு போட்டிருந்தாலும் தேர்தல் அதிகாரியின் அனுமதியை பெற்று நாம் ஓட்டு போடலாம் என்பதுதான் இந்த விதியின் ஸ்பெஷல்.

'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர் 49P விதி கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்துவிட்டது. தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையமும் இதுகுறித்து விளம்பரம் செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று தமிழத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுன்போது இந்த விதியை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்காளர் பயன்படுத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவரின் ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து , மணிகண்டனுக்கு 49 P தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
 

More News

ஜெயம் ரவியின் 25வது படம் குறித்த முக்கிய தகவல்

கடந்த 2003ஆம் ஆண்டு 'ஜெயம்' படத்தில் தமிழில் அறிமுகமான ஜெயம் ரவி 16 ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது 25வது படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர்!

நடிகர் கார்த்தியும், நடிகை ஜோதிகாவும் ஒரு படத்தில் அக்கா தம்பியாக நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'பாபநாசம்' புகழ் ஜீத்துஜோசப் இயக்கவுள்ளார்

சென்னை வாக்காளர்களுக்கு என்ன ஆச்சு? தமிழத்திலேயே குறைந்த சதவீதம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவிக்கையில்

ஓட்டு போட்டவுடன் துள்ளி குதித்த நடிகர் வடிவேலு!

நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் திரையுலகினர் உள்பட அனைவரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். 

வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது