பேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்!

  • IndiaGlitz, [Tuesday,October 22 2019]

பேனர் கலாச்சாரத்தால் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம் அடைந்ததை அடுத்து அரசியல்வாதிகளும் திரையுலக பிரமுகரகளும் இனி பேனர்களை பயன்படுத்த வேண்டாம் என தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் கூறி வந்தனர். அதனையடுத்து சமீபத்தில் ‘காப்பான்’ வெளியானபோது சூர்யாவின் ரசிகர்கள் பேனர் வைக்கும் செலவில் இலவசமாக ஹெல்மெட்டுக்களை அளித்தனர். அதேபோல் ‘அசுரன்’ வெளியானபோது தனுஷ் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்டங்களை செய்தனர்.

அந்த வகையில் தீபாவளிப் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள “பிகில்” திரைப்படத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள் கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின்பேரில் அமைத்து கொடுத்துள்ளனர்.

இந்த சிசிடிவி கேமிரா தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை காவல்துறை ஆணையர் சரவணன் அவர்கள் கூறியபோது, ‘பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர். சிசிடிவி மூலம் தேவையற்ற பிரட்சினைகள் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும். பெண் குழந்தைகள் எந்நேரத்திலும் காவல்துறை உதவி தேவைப்பட்டால் 1098 என்ற எண்ணை அழைக்கவும். உங்கள் பாதுகாப்பை சிசிடிவி உறுதி செய்வது போல உங்கள பெற்றோர் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டாயம் ஹெல்மட் அணிந்து வாகனத்தை ஓட்ட வலியுறுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நெல்லை டவுன் உதவி ஆணையர் சதீஷ்குமார் அவர்களுக்கு பாராட்டுகள்’ என்று பேசினார்.

More News

'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்

விஜய் படம் என்றாலே பாஜக அல்லது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது கடந்த கால வரலாறு. மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களும் எதிர்ப்புகளால்

'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது

ரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு

புளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்

ஆன்லைன் சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார் என்பதும் தெரிந்ததே

'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை

வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாகும்