பேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பேனர் கலாச்சாரத்தால் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம் அடைந்ததை அடுத்து அரசியல்வாதிகளும் திரையுலக பிரமுகரகளும் இனி பேனர்களை பயன்படுத்த வேண்டாம் என தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் கூறி வந்தனர். அதனையடுத்து சமீபத்தில் ‘காப்பான்’ வெளியானபோது சூர்யாவின் ரசிகர்கள் பேனர் வைக்கும் செலவில் இலவசமாக ஹெல்மெட்டுக்களை அளித்தனர். அதேபோல் ‘அசுரன்’ வெளியானபோது தனுஷ் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்டங்களை செய்தனர்.
அந்த வகையில் தீபாவளிப் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள “பிகில்” திரைப்படத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள் கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின்பேரில் அமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த சிசிடிவி கேமிரா தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை காவல்துறை ஆணையர் சரவணன் அவர்கள் கூறியபோது, ‘பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர். சிசிடிவி மூலம் தேவையற்ற பிரட்சினைகள் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும். பெண் குழந்தைகள் எந்நேரத்திலும் காவல்துறை உதவி தேவைப்பட்டால் 1098 என்ற எண்ணை அழைக்கவும். உங்கள் பாதுகாப்பை சிசிடிவி உறுதி செய்வது போல உங்கள பெற்றோர் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டாயம் ஹெல்மட் அணிந்து வாகனத்தை ஓட்ட வலியுறுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நெல்லை டவுன் உதவி ஆணையர் சதீஷ்குமார் அவர்களுக்கு பாராட்டுகள்’ என்று பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments