கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கந்துவட்டி கொடுமையால் தமிழகத்தில் அவ்வபோது கொலைகளும், தற்கொலைகளும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை கந்துவட்டியின் கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து , சுப்பு லெட்சுமி தம்பதிகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கந்துவட்டி குறித்து மனுகொடுக்க வந்தனர். இந்த நிலையில் திடீரென 4 பேர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் படுகாயம் அடைந்த நான்கு பேர்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், 'இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெறும் என்றும் இனிமேல் கந்துவட்டி குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com