'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்க்கு ஆதரவு அளித்த திரையரங்க உரிமையாளர்! ஆனால்....
- IndiaGlitz, [Wednesday,January 27 2021]
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து தற்போதும் ஒரு சில திரையரங்குகளில் நல்ல வசூலை குவித்து வருகிறது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆன 16 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதாவது வரும் 29ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் நெல்லையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கத்தின் உரிமையாளர் தனது சமூக வலைத்தளத்தில் ’மாஸ்டர்’ படத்தின் ஓடிடி ரிலீசுக்கு தான் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். ’மாஸ்டர்’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய மிகப்பெரிய தொகையாக ஆஃபர் வந்த போதிலும் விஜய் அவர்கள் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார். ’மாஸ்டர்’ திரைப்படம் எங்களுக்கு மீண்டும் பிசினஸ் கொடுத்தது. எங்களுடைய வாழ்க்கையை புதுப்பித்தது
எங்கள் திரையரங்கில் ’மாஸ்டர்’ திரைப்படம் ஏற்கனவே அனைத்து வசூல் சாதனையையும் முறித்து விட்டது. ஆனாலும் இன்னும் 10 முதல் 12 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்
‘மாஸ்டர்’ திரைப்படம் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் ஓடிடி ரிலீஸ்க்கு எதிராக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
He trusted us,he brought the business back, even though getting huge offers for direct OTT he made first release as theatrical.Master already broken so much BoxOffice Records in our screen, considering the producer has left OS BO OTT is fine but 10-12 days later might've been btr
— Ram Muthuram Cinemas (@RamCinemas) January 27, 2021