விஜய் ரசிகர்களுக்கு போலீஸார் கடும் எச்சரிக்கை: களையிழந்த கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்றைய முதல் நாள் முதல் காட்சியின் போது விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் .

விஜய்யின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, மாலை அணிவிப்பது போன்ற கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் நெல்லையில் ’பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு அந்நகர போலீசார் தடை விதித்துள்ளனர் .

சமீபத்தில் ’பீஸ்ட்’ படத்தின் டிரைலர் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டபோது ரசிகர்களின் தாக்குதலால் அந்த திரையரங்கம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. இதனை அடுத்து திரையரங்குகளில் ’பீஸ்ட்’ படத்தின் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த நெல்லை போலீசார் கட் -அ வுட் வைக்கவும் திரையரங்குகளின் முன் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதித்துள்ளனர். இதனால் நெல்லையில் மட்டும் ’பீஸ்ட்’ பட கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது.