கொரோனா வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர்!
- IndiaGlitz, [Tuesday,September 29 2020]
விபத்து காரணமாக காயமடைந்த தனது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக குடும்பமே வறுமையில் இருக்கும் நிலையிலும் தனது ஆட்டோவில் வாடிக்கையாளர் ஒருவர் தவறவிட்ட இரண்டு லட்ச ரூபாயை ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தனது பெயருக்கு முன்னால் ரஜினிமுருகன் என்று அடைமொழியாக சேர்த்துக் கொண்டார். சமீபத்தில் இவருடைய மகன் பைக் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமின்று கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆட்டோவும் சரியாக ஓடாததால் குடும்பமே வறுமையில் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது ரெகுலரான வாடிக்கையாளர் ஒருவர் அவரது ஆட்டோவில் சவாரி செய்தபோது பார்சல் ஒன்றை மறந்து விட்டு போய் விட்டார். அதை ரஜினிமுருகன் பிரித்து பார்த்த அதில் இரண்டு லட்ச ரூபாய் இருப்பது ரஜினிமுருகனுக்கு தெரியவந்தது. உடனே அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது மனைவியுடன் அந்த வாடிக்கையாளரின் வீட்டிற்கு சென்று அந்த பணத்தை ஒப்படைத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன் அவர்கள் வறுமையிலும் நேர்மையாக இருந்த ரஜினிமுருகனையும் அவரது மனைவியையும் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கி கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நேர்மையான ரசிகருக்கு ரஜினிகாந்தும் பாராட்டு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.