சொந்த வீடு, மகளுக்கு அரசு வேலை: 'பரியேறும் பெருமாள்' நடிகருக்கு கலெக்டர் செய்த உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பரியேறும் பெருமாள்’. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்தது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நாயகன் கதிர் தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. இவர் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தனது வீட்டை இழந்து தவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த செய்தி குறித்து கேள்விப்பட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர், தங்கராசுவுக்கு உதவ முன் வந்துள்ளார்.
தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியத்தில் சொந்த வீடு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணியையும் அவர் வழங்கியுள்ளார். இதுகுறித்த ஆணையை அவர் தங்கராசு மற்றும் அவரது மனைவி மகளை நேரில் அழைத்து வழங்கியுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’பரியேறும் பெருமாள்’ படத்தில் மிகவும் சிறப்பாக நடித்த நாட்டுப்புற கலைஞரும் நடிகருமான தங்கராசுவுக்கு சினிமா துறையில் இருந்து எந்தவித உதவியும் இதுவரை வரவில்லை என்றாலும் நெல்லை மாவட்ட ஆட்சியரின் அக்கறையால் மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments