விஜய் வில்லனின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தில் கார்ப்பரேட் தொழிலதிபர் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. 'கத்தி' படத்தை அடுத்து அவர் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நிதின் முகேஷின் பெற்றோர்கள் அவருக்கு பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ருக்மணி ஷாஹாய் என்பவர்தான் மணப்பெண். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துள்ள ருக்மணி தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாராம்.
தனது வருங்கால மனைவி குறித்தும் திருமண தேதி குறித்தும் நீல் நிதின் கூறியபோது, 'இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம். மிகவும் எளிமையான அதே நேரத்தில் தனக்கு பொருத்தமான பெண்ணை தனக்கு தனது பெற்றோர் பார்த்துள்ளதாகவும், அடுத்த வருடம் தங்களது திருமணம் நடைபெறும் என்றும் நிதின்முகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திருமணம் நிதினின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவரது பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.