உருவத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள்....! 8 ஆயிரம் நபர்களை பிளாக் செய்த சீரியல் நடிகை....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய உருவத்தை கிண்டலடித்த, 8 ஆயிரம் நபர்களை பிளாக் செய்துள்ளதாக பிரபல சீரியல் நடிகை கூறியுள்ளார்.
வாணி ராணி, சித்தி 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை நேஹா மேனன். இவர் தான் சந்தித்த உருவகேலி குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "நான் உயரம் குறைந்து, கொஞ்சம் Chubby -யாக இருப்பேன். சில சமயங்களில் நானே இவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறேன். பின்பு டிசைனர்கள் மூலம் ஆடை அணிவதன் மூலம் அதை கட்டுப்படுத்தலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் கற்றுக்கொண்ட உங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். என்னைப்போல இருக்கும் பெண்கள் வெயிஸ்ட் பெல்ட் பயன்படுத்தலாம், இல்லையெனில் நீளமான கோடு போட்ட உடைகளை அணியும்போது, எடை குறைந்தது போலவும், உயரமாக இருப்பது போலவும் தோற்றமளிப்பீர்கள். இந்த விஷயங்களைத்தான் நான் பின்பற்றுகிறேன்.
இன்ஸ்டாகிராம்-ல் தான் உருவ கேலி என்பது எனக்கு துவங்கியது. அதில் வரும் கமெண்டுகளை பார்த்து, வேதனையுடன் அம்மாவிடம் சொல்வேன். அவர் நம்மை குறித்து பேசுபவர்களுக்கு, நாம் என்ன பிரச்சனையை சந்திக்கிறோம், எதனால் எடை அதிகரித்தது என அவர்களுக்கு தெரியாது" அதனால் நீ அவர்களை பற்றி நினைக்காதே என ஆறுதல் கூறுவார்.
எனக்கு இன்ஸ்டாகிராமில் வரும் நெகட்டிவ் கமெண்ட்டுகளின் கணக்கை பிளாக் செய்துவிடுவேன். இதுவரை 8 ஆயிரம் கணக்குகளை பிளாக் செய்துள்ளேன். உருவத்தை கிண்டல் செய்து மெசேஜ்கள் வந்தால் அவற்றையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும், மன அழுத்தமும் குறையும். இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வர எனக்கு ஒரு வருடம் ஆனது.நல்ல விதமாக வரும் கமெண்டுகளை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு, என் மேல் நானே அன்புகாட்ட பழகிக்கொண்டேன். முதலில் தப்பாக பேசுபவர்களை பார்த்து பயப்படும் நான், இப்போது குழப்பத்திலிருந்து விலகி வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments