'நீயா நானா' கோபிநாத் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ’நீயா நானா’ என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சிக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பதும் ஒவ்வொரு வாரமும் பல தொலைக்காட்சி ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடப்பட்டது
இந்த நிலையில் கோபிநாத்தின் தந்தை சந்திரன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. கோபிநாத் தந்தை மறைவை ஒட்டி தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமன்றி ஒரு சில திரைப்படங்களிலும் கோபிநாத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout