'நீயா 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 30 2019]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி கடந்த ஆண்டு வெளியான 'சர்கார்' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய இரண்டு படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும், 'மாரி 2' படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன

இந்த நிலையில் தற்போது அவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவ்வாறு உருவாகி வரும் படங்களில் ஒன்றுதான் 'நீயா 2'. வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த த்ரில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'நீயா 2' படத்தை எல்.சுரேஷ் இயக்கி வருகிறார். ஷபீர் இசையில், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது