'நீயா 2'வின் ஆரம்ப புள்ளி 'நாகினி' தான்: இயக்குனர் எல்.சுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிய 'நீயா 2' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த விழாவில் பேசியவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்:
ராய்லட்சுமி: மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி வந்தது குறித்து மகிழ்ச்சி. எனக்கு எத்தனையோ பாம்பு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் சவாலாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன்
இயக்குனர் வெற்றிமாறன்: நானும், இயக்குனர் எல்.சுரேஷும் பாலுமகேந்திரா அவர்களிடம் ஒன்றாக பணிபுரிந்துள்ளோம். எனக்கு சுரேஷின் கடுமையான உழைப்பு பிடிக்கும். அவரது இந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்
இயக்குனர் சுரேஷ்: இந்த படம் உருவாக ஆரம்ப புள்ளியாக இருந்தது தொலைக்காட்சி தொடராக வரும் 'நாகினி'தான். நான்கு கதைகளை பின்னிக் கொண்டுதான் இப்படத்தின் பயணம் செல்லும்.
நடிகர் பாலா சரவணன்: இப்படத்தில் கமர்ஷியல், காமெடி என அனைத்துமே நன்றாக வந்திருக்கிறது
ஷபீர் இசையமைப்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்த இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com