'நீயா 2' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் கடந்த 1979ஆம் ஆண்டு 'நீயா' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. அதன்பின் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நானே வருவேன்' என்ற படத்தை ஸ்ரீப்ரியாவே நடித்து இயக்கியிருந்தார். இந்த படமும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தற்போது 'நீயா 2' என்ற திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது சென்சார் சான்றிதழும் பெற்றுவிட்டது இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய்லட்சுமி, கேதரின் தெரசா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எல்.சுரேஷ் இயக்கியுள்ளார். ஷபீர் இசையில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

எல்.கே.ஜி வெற்றியால் பயனடைய போகும் கஜா பாதித்த பகுதிகள்

ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி. திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது...

ஆர்யாவுக்கு விடை கொடுத்து அனுப்பிய 'காப்பான்' படக்குழு!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில்

என்னாலும் வாக்குகளை பிரிக்க முடியும்: கருணாஸ் ஆவேசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலா, தினகரன், திமுக என மாறி மாறி ஆதரவு கொடுத்து கொண்டிருந்த நடிகரும் எம்.எல்.வுமான கருணாஸ்

சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது

'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' சென்சார் தகவல்

'பியார் பிரேமா காதல்' வெற்றி படத்தை அடுத்து பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என்ற திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி வெளியாகும்