பாட்னா கபடி அணிக்கு அம்பாசிடராக மாறிய விஷால் நாயகி

  • IndiaGlitz, [Saturday,October 20 2018]

2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் விஜய்சேதுபதி அம்பாசிடராக இருக்கின்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி இருக்கும் அதே பி' பிரிவில் இருக்கும் இன்னொரு அணியான பாட்னா பைரேட்ஸ் அணிக்கு அம்பாசிடராக நடிகை நீதுசந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதுசந்திரா அம்பாசிடராக உள்ள பாட்னா அணி தற்போது வரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்து 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது