சூர்யாவின் 'எஸ்3' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,September 21 2016]

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'எஸ்3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. மேலும் இந்த படம் வரும் டிசம்பர் 16ல் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் சூர்யாவின் அறிமுகப்பாடலின் முதல் வரி 'ஓ சோனே சொனே சூப்பர் சோனிக்' என்பதை தனது சமூக வலைத்த்தளத்தில் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.
இந்த பாடல் மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்த பாடலில் சூர்யாவுடன் இணைந்து பிரபல நடிகை நீதுசந்திரா நடனம் ஆடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
நீதுசந்திரா ஏற்கனவே தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம், யுத்தம் செய், ஆதிபகவான், சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.