தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதி வரும் தமிழ் மாணவர்

  • IndiaGlitz, [Sunday,May 06 2018]

இந்தியா முழுவதும் இன்று காலை முதல் நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்வை கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் எழுதி வரும் தமிழ் மாணவர் ஒருவர் தனது தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வை எழுதி வருகிறார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நீட் தேர்வை எழுதும் தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அந்த வகையில் திருத்துறையைபூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தன் மகனை நீட் தேர்வு எழுந்த எர்ணாகுளத்திற்கு நேற்று அழைத்து சென்றார். பின்னர் இன்று மகனை நீட் தேர்வுக்கு அனுப்பி விட்டு தந்தை தங்கும் விடுதியில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார்.

மரணம் அடையும் முன் அந்த விடுதியின் மேலாளரிடம் கிருஷ்ணசாமி தனது மகன் நீட் தேர்வுக்காக அலைக்கழிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தந்தை கிருஷ்ணசாமியின் மரணம் தெரியாமல் நீட் தேர்வை எழுதி வரும் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு தந்தை இறந்த செய்தி அவர் தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் தெரிவிக்கப்படும் என தெரிகிறது.

More News

பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து கருத்து கூறிய சமந்தா

திரையுலகில் பட வாய்ப்புகாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இருப்பதாக அவ்வப்போது எழுந்து வரும் புகார்களின் மூலம் தெரியவருகிறது.

3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் ஓகே செய்த விஜய்

சமீபத்தில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, தமிழில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ஹன்சிகா

இதுவரை ஜாலியான, பொழுதுபோக்கு படங்களில் நடித்து வந்த நடிகை ஹன்சிகா, முதன்முறையாக சவாலான கேரக்டரை ஏற்று நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாஅர். 

முடிவுக்கு வந்த நிவேதாவின் பிகினி குழப்பம்

நடிகை நிவேத பேத்ராஜ், ஜெயம் ரவியுடன் நடித்த 'டிக் டிக் டிக்' படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 22ஆம் தேதி என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

என்ன தைரியம் இருந்த என்னை பார்த்து: பிரகாஷ்ராஜ் கோபம்

சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.