இன்று நீட் தேர்வு: மாணவ, மாணவிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் இன்று ஒடிஷாவை தவிர நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. ஒடிஷாவில் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பின்னர் ஒரு நாள் நீட் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு தேர்வு அறைக்கு மதியம் 1.15 மணிக்கே வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக வரும் மாணவர்கள் கண்டிப்பாக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்றுவிட அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாடு முழுக்க 15 லட்சம் மாணவர்களும், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 மாணவர்களும் இந்த நீட் தேர்வை எழுதவுள்ள நிலையில் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கால்குலேட்டர், பென் டிரைவர், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனம் எதையும் எடுத்து செல்ல கூடாது.
* காதணி, மூக்குத்தி போன்ற அணிகலன்கள் மற்றும் உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்ல கூடாது.
* எழுது பொருட்களை எடுத்து வரக்கூடாது. தேர்வு எழுத தேவையான பேனா தேர்வறையில் அளிக்கப்படும்.
* கையில் வாட்ச் கட்டியிருக்க கூடாது. கேமிரா உள்ளிட்ட பொருட்களுக்கும் அனுமதி கிடையாது
* பர்ஸ், ஹேண்ட்பேக், ஹேர்பின், ஹேர் ரப்பர்பேண்ட், பெல்ட், தொப்பி, ஆகியவை அணிந்திருக்க கூடாது
* பெண்கள், ஆண்கள் யாராக இருந்தாலும் முழுக்கை உடை அணிய கூடாது.
* ஷூ அணிந்து வரக்கூடாது. சாதாரண செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும்.
* முகத்தை மூடும் படி உடைகளை உடுத்த கூடாது.
* தமிழ் கேள்வித்தாளில் தவறு இருந்தால் ஆங்கில கேள்வித்தாளை படித்து புரிந்து கொள்ள வேண்டும்
* தேர்வு அறையில் தேர்வு கண்காணிப்பாளரை தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது.
* தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு அறையில் இருந்து வெளியே போக முடியாது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments