ஜப்பானில் இதுதான் நீட் தேர்வு?
Send us your feedback to audioarticles@vaarta.com
நம்மூரில் மருத்துவ படிப்பு படிக்க தேவையான தகுதி 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களா? நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண்களா? என்ற வாதங்கள் காரசாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு உண்மையான மருத்துவம் படிக்கவுள்ள மாணவனுக்கு என்ன தேவை என்பதை ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி புதுமையான தேர்வு ஒன்றை வைக்கின்றது.
அந்த மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மூன்றுவிதமான தேர்வுகளை வைக்கின்றது. ஒன்று, ஒரு ஸ்டாம்ப்ச் அளவு பேப்பரை கொடுத்து அந்த பேப்பரில் அவர்கள் கூறும் பறவை ஒன்றை மருத்துவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் உதவியால் செய்ய வேண்டும். பேப்பரை ஒட்டவோ, வெட்டவோ கூடாது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பிற்காலத்தில் டாக்டரானால் சிகிச்சை செய்யும் போது கைநடுங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக ஒரு இறந்துபோன பூச்சியை பல பாகங்களாக வெட்டி கொடுப்பார்கள். அந்த பூச்சியை மீண்டும் ஒரு முழு பூச்சியாக முதலில் கூறியது போல மருத்துவ உபகரணங்களின் உதவியால் ஒட்ட வைக்க வேண்டும். இதன்மூலம் ஒரு மருத்துவர் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக முடியும்.
மூன்றாவதாக சுஷி என்ற ஜப்பானிய உணவை மினி சைசில் தயாரிக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இருந்து சின்ன சின்னதாக மினி சைசில் சுஷி தயாரிப்பவர்களே தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். இதன்மூலம் நுணுக்கமான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க அந்த மாணவனுக்கு பழக்கப்படும்.
இந்த மூன்று தேர்வுகளில் ஒவ்வொரு தேர்வுக்கும் 15 நிமிடங்கள் கால அவகாசம் அளிக்கப்படும். இந்த மூன்றிலும் தேர்ச்சி பெறுபவர்களே ஒரு சிறிய எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் மருத்துவம் படிக்க சீட் கொடுப்பார்கள். இந்த தேர்வு முறை தற்போது ஜப்பான் முழுவதும் பரவி வருகிறது.
டாக்டர் மட்டுமின்றி எந்த ஒரு தொழில்படிப்புக்கும் அதற்குரிய தகுதி இருக்கின்றதா? என்ற தேர்வுதான் சிறந்ததாக இருக்கும். 12ஆம் வகுப்பிலோ அல்லது நீட் தேர்விலோ பக்கம் பக்கமாக பரிட்சை எழுதி பாஸ் செய்வதால் மட்டுமே ஒருவர் சிறந்த டாக்டராகிவிட முடியாது. இதுபோன்ற தேர்வுகள் நம் நாட்டிற்கும் வந்தால்தான் சிறந்த மருத்துவர்கள் வெளியே வரமுடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments