நீட் தேர்வு: மருத்துவ மாணவர்களை அடுத்து நர்ஸிங் மாணவர்களுக்கும் ஆப்பு
- IndiaGlitz, [Wednesday,September 19 2018]
மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,14,602 பேர்களில் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி எழுதினர். குறிப்பாக கிராமத்து மாணவர்களின் மருத்துவக்கனவு நீட் தேர்வினால் நனவாகாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த அடியாக பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வருவது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழக அரசு அளிக்கும் பதிலை பொறுத்துதான் நர்ஸிங் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் உள்ளது.
நர்ஸிங் படிப்புக்கு நீட் தேர்வு கூடாது என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படியே போனால் பி.காம் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு வைத்து விடுவார்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.