இனி நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம்- அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

வரும் 2021-22 ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் பி.எஸ்.சி நர்ஸிங் மற்றும் லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம். அதேபோல சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு பின்பற்றப் படுகிறது.

அந்த வகையில் இத்தேர்வுக்கு தமிழகத்தில் சில ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டபோதும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப் பட்டது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மாநில மொழிகளில் வரும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்து உள்ளது.

இதனால் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் 2021 கல்வியாண்டு முதல் பி.எஸ்.சி நர்சிங், பி.எஸ்.சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.