நீட் காரணமாக மருத்துவ சீட் கிடைக்காத மாணவி தற்கொலை

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

மருத்துவ படிப்புக்கான நாடு தழுவிய நீட் தேர்வு பலருடைய மருத்துவ கனவை தகர்த்தெறிந்துவிட்டது. 199 கட் ஆப் வைத்திருந்த மாணவர், மாணவியர்களுக்கு கூட நீட் காரணமாக மருத்துவப்படிப்புக்கு சீட் கிடைக்காததால் மனவருத்தத்தில் உள்ளனர்.
இதன்காரணமாக பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வருத்தத்தில் இருக்கும் நிலையில் இன்று ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அனிதா என்ற அரியலூரை சேர்ந்த மாணவி, சமீபத்தில் நீட் அவசியம் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக மன அழுத்த்ததிற்கு ஆளானார்.
இந்த நிலையில் மனமுடைந்த மாணவி அனிதா இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவரும் சண்முகம் என்பவரின் மகளான அனிதா, 12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, 200-க்கு 196.7 கட் ஆப் வைத்திருந்தார். ஆனால் நீட் தேர்வில் இவருக்கு 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் இவருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.